தனியார் கல்வி நிலைய கழிப்பறையில் கேமரா; பொலிஸார் தீவிர விசாரணை
கம்பஹா நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையத்தின் பெண்களுக்கான மலசல கூடத்தில் நவீன தொழில்நுட்ப கமரா பொறுத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த கல்வி நிலையத்தில் கற்கும் மாணவிகள் சிலர் மலசல கூடத்தில் கமரா பொருத்தப்பட்டுள்ளதை அவதானித்து அது தொடர்பில் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பெற்றோர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கையடக்க தொலைபேசியிலோ அல்லது மடிக்கணினியிலோ அங்கு நடப்பதை நேரடியாகப் பார்க்கும் வகையில் கமரா பொறுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி நிலையத்தின் உரிமையாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில் கமராவை பொறுத்திய நபரை விரைவில் கைது செய்ய முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
பெண்கள் கழிப்பறையில் கேமரா; மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை