இன்ஸ்டாகிராம் மோகத்தால் பெங்களூரில் இலங்கை மாணவனுக்கு நேர்ந்த கதி
இந்தியாவின் பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபருடன், நட்புடன் பழகியுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது மேற்கொள்ளப்பட்ட காணொளி அழைப்புகளில் குறித்த நபர் இந்த மாணவனுக்கு தெரியாமல் தனிப்பட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் தவறான காணொளிகளை இரகசியமாகப் பதிவு செய்தார்.

அவர் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து, அந்த நபர் குறித்த மாணவனுக்கு மிரட்டல் விடுத்து 36,000 இந்திய ரூபாயைப் பறித்தார்.
பணம் கொடுத்த பிறகும், மேலதிக பணம் கேட்டு அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன.
காணொளிகளைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் , காவல்துறையிடம் முறைப்பாடு அளித்தார்.
காவல்துறை இந்த இணையவழிப் பாலியல் மிரட்டல் (Cyber Extortion) கும்பல் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.