கோடிகளில் பணம் சம்பாதிக்கும் ராசியினர் இவர்கள் தான் ; இன்றைய நாளுக்குரிய இராசிப்பலன்
குரோதி வருடம் ஆனி 9, ஞாயிற்று கிழமையான 2024.06.23 சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். இவ்வாறு சஞ்சரிப்பதால் ரிஷபம் ராசியை சேர்ந்த ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
இன்றைய நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். கடுமையான உழைப்பு மூலமாக பலன்களை பெறுவீர்கள். வருமானம் அதிகமாகும். செலவுகள் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக காணப்படும்.
ரிஷபம்
இன்றைய நாள் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டும் சிறப்பானதாக அமையும். குடும்பத்தில் உங்களுடைய நிலை வலுவாகும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கு திட்டமிடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். இதுவரை நீங்கள் என்னென்ன இழந்துள்ளீர்கள் மற்றும் எவற்றை பெற்றுள்ளீர்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இதன் மூலமாக வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சரியான பாதையில் பயணிக்க ஆரம்பிப்பீர்கள். தொழிலில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்
இன்றைய நாள் உங்களுக்கு அமோகமான நாளாக இருக்கப் போகிறது. நீண்ட நாட்களாக ஒரு சில பிரச்சினைகளை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்த உங்களுக்கு அதற்கான தீர்வுகள் கிடைக்கும். தொழிலில் புதிய யோசனைகளை அமல்படுத்துவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும் என்பதால் ஆடம்பரமாக பணத்தை செலவு செய்வீர்கள்.
சிம்மம்
இன்றைய நாள் வாழ்க்கை துணையுடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரு சில பிரச்சனைகள் ஏற்படலாம். பணி நிமித்தமாக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கான பலன்களை பெறுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்கள் ஆரோக்கியத்தை நினைத்து சற்று வருத்தத்துடன் காணப்படுவீர்கள். ஆனால் மாலை நேரத்தில் அந்த வருத்தங்கள் மறைந்துவிடும். வருமானம் அதிகமாகும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட ஒரு சில பிரச்சினைகள் ஏற்படலாம். கடுமையான உழைப்புக்கு ஏற்ற நல்ல முடிவை பெறுவீர்கள்.
துலாம்
இன்றைய நாள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் கிடைக்கும். உங்கள் ஆசைகளை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்யாதீர்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். செலவுகள் குறையும். வீட்டை மறுசீரமைப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவீர்கள். வேலையைப் பொறுத்தவரை இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும்.
விருச்சிகம்
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட புதிய விஷயங்களை செய்வதற்கு இன்று ஆரம்பிப்பீர்கள். இன்று அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப பொறுப்புகளை ஏற்று அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள்.
தனுசு
இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். முக்கியமான வேலைக்காக வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வேலையில் கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
இன்றைய நாள் முழுவதும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை கழிக்காதீர்கள். வேலையில் நல்ல முடிவுகளை பெறுவீர்கள். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
இன்றைய நாள் முழுக்க முழுக்க மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாள் உங்களுடைய குடும்பத்தினர் உங்களைப் பாராட்டுவார்கள். செலவுகள் அதிகமாக வாய்ப்புள்ளது. எனினும் வருமானம் வழக்கம் போல இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.
மீனம்
இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். வருமானம் வழக்கம் போல இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட தியானம் செய்யவும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முடிவுகளை பெறுவீர்கள். பணியிடத்தில் அதிகாரிகளுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.