இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்
இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 294.5113 ரூபாவாகவும், விற்பனை விலை 303.7761 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு
கனேடிய டொலரின் விற்பனை விலை 222.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.14 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 391.35 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.