வெளியான தகவல் உண்மையில்லை; மறுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து நேற்று (23) டெல்லிக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்தியாவின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நேற்று (23) அவசர தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. சம்பவம் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்,
விமானம் திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே சென்றது
விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன.
இது ஒரு சாதாரண நிலைமையே. இவ்வாறான நிலைமைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக விமானக் குழுவினர் முழுப் பயிற்சி பெற்றுள்ளனர்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் பயணிகளின் பாதுகாப்புக்காக குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது.
பின்னர் குறித்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லியைச் சென்றடைந்தது எனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.