எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான தகவல்!
வங்கி நடவடிக்கைகள் காரணமாக இந்த வாரமும் அடுத்த வாரமும் எரிபொருளை இலங்கைக்கு விநியோகிக்க முடியாமல் உள்ளமை தொடர்பில் விநியோகஸ்தர்கள் கனியவள கூட்டுதாபனத்திற்கு அறிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கனியவள கூட்டுத்தாபனம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த தொகுதி எரிபொருள் துறைமுகத்தில் இருந்து தரையிறக்கப்படும் வரை பொது போக்குவரத்து, மின்னுற்பத்தி மற்றும் தொழிற்துறை என்பவற்றுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
அடுத்த வாரம் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் குறிப்பிட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, புதிய கப்பல்கள் நாட்டை வந்தடையும் திகதியை தற்போது அறிவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
மீண்டும் மசகு எண்ணெய் நாட்டை வந்தடையும் வரை சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாகவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.