நாட்டில் 20-30 வயதுடையோர் தொடர்பில் சுகாதார அமைச்சரின் முக்கிய பரிந்துரை
இலங்கையில் 20 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளை நாளை முதல் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் ஒன்றிணைந்த அரச சேவை தாதிகள் சங்கத்தினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த வயதுப் பிரிவில் 3.7 மில்லியன் பேர் தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.
மேலும் குறித்த வயதுப் பிரிவில் உள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே ஏனையோருக்கு எந்தவொரு தடுப்பூசி கிடைத்தாலும் அதனை துரிதமாக வழங்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.