ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தந்தை - மகன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
வெல்லவாய - எல்லவெல ஆற்றில் நீராட சென்ற நிலையில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (20) வெல்லவாய - எல்லவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (38), மகன் (15) மற்றும் மகள் (11) ஆகியோரே வெல்லவாய - எல்லவெல ஆற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் உயிரிழந்த மூவருக்கும் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனை மொனராகலை பொது மருத்துவமனையில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே தந்தை மற்றும் மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிசெய்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சிஓவிடியின் ஏற்பாடுகளின் கீழ் இரண்டு மரணங்களையும் இறுதி செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி ஹெச்எம்ஜே ஹேரத் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.