வேகமாக பரவிவரும் இன்ஃப்ளூவன்சா; சுகாதார அமைச்சின் அறிவிப்பு
இந்தியாவில் வேகமாக பரவிவரும் இன்ஃப்ளூவன்சா வைரஸ் தொடர்பில் இலங்கையர்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி இதனைக் குறிப்பிட்டார். இந்தியாவின் வடக்கு பிராந்திய மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்கிறது.
சாதாரண வைரஸ் தொற்றாகவே காணப்படும்
இந்த நிலையில், இலங்கையிலும் H3N2 என அறியப்படும் குறித்த இன்ஃப்ளூவன்சா வைரஸ் பரவக்கூடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.
H3N2 என அறியப்படும் குறித்த இன்ஃப்ளூவன்சா வைரஸ் சாதாரண வைரஸ் தொற்றாகவே காணப்படும் என பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, கூறியுள்ளார்.
இதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் இந்த வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை எனவும், தொற்று ஏற்பட்டால் வழமையாக சிகிச்சைகளை பெறும் வகையில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது போதுமானதாக அமையும் எனப் பிரதி சுகாதார அமைச்சர் கூறினார்.