40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம்; சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, சர்வதேச அளவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
ஏதோ ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 376 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,680-க்கு விற்பனையாகிறது.
இன்று கிராமுக்கு 47 ரூபாய் உயர்ந்து, ரூ.4,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.68,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.