இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி
2025 பெப்ரவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் மேலும் குறைந்துள்ளது.
நுகர்வோர் பணவீக்க வீதம்
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் 2025 பெப்ரவரி மாதத்தில் -4.2% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் பணவீக்க வீதம் 2025 ஜனவரி மாதத்தில் -4.0% ஆக பதிவாகியிருந்தது. அதேபோல், 2025 பெப்ரவரி மாதத்தில் உணவுப் பிரிவின் ஆண்டு பணவீக்கம் -0.2% ஆக உயர்ந்துள்ளது. இது 2025 ஜனவரி மாதத்தில் -2.6% ஆக பதிவாகியிருந்ததாக குறிப்பிடபட்டுள்ளது.
மேலும், 2025 பெப்ரவரி மாதத்தில் உணவு அல்லாத பிரிவின் ஆண்டு பணவீக்கம் -6.1% ஆகக் குறைந்துள்ளது. இது 2025 ஜனவரி மாதத்தில் -4.7% ஆக பதிவாகியிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.