இலங்கை வைத்தியசாலை ஒன்றில் மருத்துவர்கள் உட்பட பலருக்கு தொற்று
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் 3 மருத்துவர்கள் உட்பட 16 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவ அதிகாரி பாலித ராஜபக்ச கூறினார். அதன்படி 3 மருத்துவர்கள், 6 செவிலியர்கள் மற்றும் 7 ஊழியர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 12 வது நாளில் பல நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனைகளில் 27 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது 116 கொரோனா நோயாளிகள் பதுளை பொது வைத்தியசாலையில் ஐந்து வார்டுகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் தினமும் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் பாலித ராஜபக்ச கூறினார்.