யாழில் வர்த்தகர் ஒருவருக்கு ஒன்றை இலட்சம் ரூபா அபராதம்! என் தெரியுமா?
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கிருமி நாசினிகளை விற்பனை செய்ய வர்த்தகருக்கு ஒன்றை இலட்ச ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.சாவகச்சேரி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் களை, கிருமி நாசினிகளை விற்பனை செய்யப்படுவதாக விவசாய திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வர்த்தக நிலையத்தினை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து ஒரு தொகை சட்டவிரோத கிருமி நாசினிகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வர்த்தகர் குற்றத்தினை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.