போதைப்பொருள் சோதனையில் பரபரப்பு ; பொலிஸாரை தாக்கிய நபர்கள் கைது
போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று, நேற்று முன்தினம் (31) இரவு 'கல்வலயாய 1000 ஏக்கர்' பகுதியில் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த நான்கு நபர்களால் பொலிஸார் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக மஹா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட தடியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று (01) தெஹியத்தக்கண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.