12 இலட்சம் ரூபாய் பணத்தை கடித்து வைத்த எலிகள்; கண்ணீரில் தம்பதிகள்!
பெண்ணொருவர் வீட்டில் தான் எட்டு ஆண்டுகளாக சேமித்து வைத்த 12 இலட்சம் ரூபாய் பணத்தை எலிகள் கடித்துக் கிழித்துப் போட்டமை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நகைகள் வாங்குவதற்காக தனது கணவருக்குத் தெரியாமல் பரண் மீது இருந்த பெட்டியில் பணத்தை சேமித்து வந்துள்ளார்.

எட்டு ஆண்டுகள் சேமித்த பணம்
எட்டு ஆண்டுகள் கழித்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நகை வாங்க முடிவு செய்த அவர், பரண் மீது இருந்த பெட்டியை கீழே இறக்கி திறந்து பார்த்துள்ளார்.
அத்தனை வருடங்கள் தான், குருவி போல் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தாள்களை எலிகள் துண்டு துண்டாக கடித்துப் போட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின்னர், விடயத்தைத் தன் கணவரிடம் கூறி, கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். பிறகு அவர், அந்த கிழிந்த பணத்தாளை எண்ணிப் பார்த்தபோது, அதில் 12 இலட்சம் ரூபாய் இருந்துள்ளது.
எலிகள் கடித்துக் கிழித்துப் போட்ட பணத்தாள்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.