இந்திய கருவூலம் கவனம்; சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கு பிமல் பதிலடி!
தனது நண்பரான ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்னும் பாணியில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியின் கருத்து கடும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த நிலையில் ஜேவிபியின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க பதில் டுவிட் ஒன்றை இட்டுள்ளார்.
அதாவது ராஜபக்சக்களை மீட்க வரும் குழுவை இலங்கை மக்கள் வரவேற்க விரும்புகிறார்கள். ராஜபக்சக்களை காப்பாற்றி இந்தியாவிற்கு கொண்டு செல்ல எமது மக்கள் செலவும் செய்வார்கள்.
Subramaniyam Swamy wants to send Indian Military to rescue Rajapakshas! pic.twitter.com/yM1fn9FGQF
— Bimal Rathnayake (@BimalRathnayake) July 10, 2022
ஆனால் திரு.சுவாமி, அதற்குப் பிறகு, இந்திய நிதி கரூவூலத்தைப் பற்றி அவதானமாக இருங்கள்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.