ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
டுபாயில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பிற வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் வீரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை ஒரு போட்டிக்கு மட்டுமே அழைத்துச் செல்ல முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வீரர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி, அந்த போட்டிக்கான கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.