இந்திய மாணவி உயிரிழப்பு தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்து
அமெரிக்காவில் பொலிஸ் வாகனம் மோதி இந்திய வம்சாவளி மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாஹ்னவி கந்துலா என்ற இந்திய வம்சாவளி மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மரணம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என இந்திய துணை தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளி மாணவி ஜாஹ்னவி கந்துலா பொலிஸ் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கேலி செய்து சிரிக்கும் வீடியோ வெளியானதாக கூறப்படுகிறது.
ஜாஹ்னவி கந்துலாவின் மரணத்தைக் கையாளும் ஊடகங்கள் உட்பட சமீபத்திய செய்திகள் ஆழ்ந்த கவலையளிப்பதாக சான்பிரான்ஸிஸ்கோ இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.