இலங்கை விமான நிலையத்தை பரபரப்பாக்கிய இந்திய பிரஜை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக குஷ் ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இந்திய நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (20) மாலை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

குஷ் ரக போதைப்பொருள்
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 01 கிலோகிராம் 68 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்தியப் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.