இந்தியாவின் தொழிலதிபர் மகனின் திருமணம் இலங்கையில்
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான மோகன் சுரேஷ், தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்தை நடத்த இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திருமணத்திற்கு அதிகமானோர் வருவதனால் இது நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆடம்பரமான திருமண விழா
இந்த ஆடம்பரமான திருமண விழா எதிர்வரும் 23 ஆம் திகதி பென்டோட்டாவில் உள்ள சினமன் விருந்தகத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 300 இந்திய விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ரூ. 35 மில்லியன் வருவாயை ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.