மன்னாரில் இரு இலங்கையர்களுடன் கைதான இந்தியர் ; சோதனையில் சிக்கிய சட்டவிரோத பொருட்கள்
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 168,000 சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் லொறியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் இந்திய பிரஜையொருவர் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார், கொழும்பு 14 ஆகிய பகுதிகைளைச் சேர்ந்த 22 மற்றும் 67 வயதுடைய இருவரோடு சென்னையைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.