வேலைக்கு செல்வதாக கூறி கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு யுவதிகள்!
வேலைக்கு செலவ்தாக கூறி விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு யுவதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.
தலவதுகொட, மடிவெல பகுதியில் ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி நேற்று முன்தினம் (04) இரவு முற்றுகை இடப்பட்டு , இரு இளம் பெண்கள் உட்பட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பில் வேலை
மிரிஹான காவல் தலைமையகத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. நுகேகொட நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் பேரில், சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்லப்படிருந்தது.
கைது செய்யப்பட்ட பெண்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள், அனுராதபுரம் மற்றும் ஹொரணையைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளம் பெண்கள் கொழும்பில் வேலை செய்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை , உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் குறித்த விபச்சார விடுதிக்குச் செல்வது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.