சீரற்ற காலநிலையை சாதகமாக்கும் இந்திய கடற்றொழிலாளர்கள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில், இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
சீரற்ற காலநிலையால், வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

இதன் காரணமாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இதனை, சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள இந்திய இழுவை மீன்பிடி கடற்றொழிலாளர்கள், கட்டைக்காட்டு கடற்பரப்புக்கு ஒரு கிலோமீற்றர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
வெற்றிலைக்கேணி பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைந்துள்ள போதிலும், எந்தவித பயமுமின்றி இந்திய கடற்றொழிலாளர்கள், கடற்றொழிலில் ஈடுபடுவதாக யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.