தலைமன்னாரில் மணல் திட்டில் சிக்கிய இந்தியச் சிறுவன் ; பாதுகாப்பாக மீட்ட இலங்கைக் கடற்படை
தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா' நிறுவனத்தின் கடற்படையினர் அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணல் திட்டில் நபர் ஒருவர் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை
தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அச்சிறுவன் தென்னிந்தியப் பகுதியிலிருந்து படகு மூலம் வருகை தந்து, வழியறியாமல் மணல் திட்டில் சிக்கியது கண்டறியப்பட்டது.
மீட்கப்பட்ட சிறுவன் கடற்படையினரால் 'தம்மென்னா' முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.
தற்போது அச்சிறுவனை மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.