இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி
இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, ஜெனரல் உபேந்திர திவேதி, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல், இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வருகைதர உள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர், பல முக்கிய சந்திப்புகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கடற்படை மதிப்பாய்வு
இதேவேளை, பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலைத்தீவு, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த எட்டு போர்க் கப்பல்கள் இந்த வாரம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச கடற்படை மதிப்பாய்வில், பங்கேற்பதற்காகக் குறித்த கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன.
இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், எதிர்வரும் 30ஆம் திகதி இந்த கடல்சார் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.