டிக் டொக் காதலால் வந்த வினை ; 19 வயது இளைஞனால் சிறுமிக்கு நடத்தப்பட்ட கொடூரம்
களுத்துறை, புலத்சிங்கள பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் டிக் டொக் (Tik tok) காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொபவக பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக் டொக் காதல்
குறித்த சந்தேக நபர் புலத்சிங்கள, அதுர பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் டிக் டொக் (Tik tok) சமூக ஊடகத்தின் மூலம் காதல் உறவில் ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் சில காலங்களுக்கு முன் டெல்மெல்லா பகுதியில் உள்ள ஒரு குளத்திற்குச் சென்ற போது குறித்த காதலன் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபர் படிப்படியாக சிறுமியைத் தவிர்த்து வந்ததாகவும், இது தொடர்பாக சிறுமி செய்த முறைப்பாட்டுக்கு அமைய, காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.