ChatGPT க்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்திய செயலி
உலகலாவிய ரீதியில் AIயின் ஆதிக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
google playstore மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்த ChatGPT, Gemini போன்ற உலகப் பிரமாண்ட செயலிகளை பின்தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) உயர்ந்துள்ளது.
இந்தியாவை சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு சேவை பெரும் வெற்றி பெற்றிருப்பது பெருமையான தருணம் ஆகும்.
பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) சாதாரண செட்போட் சேவையாக மட்டுமின்றி தேடல் (Search), உரையாடல் (Chat), மற்றும் உற்பத்தித் திறன் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக காணப்படுகிறது.
மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு இது தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியை, மில்லியன் கணக்கான பயனர்கள் பதிவிறக்கம் செய்ததன் மூலம் இந்த சாதனையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெர்ப்ளெக்சிட்டியின் இந்த வெற்றி, இந்திய தொழில்நுட்பத் துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது.
சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.