இலங்கை அணியை வெள்ளையடித்தது இந்தியா
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ரி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளால் 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் அவிஸ் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணியில் அதிரடியாக ஆடிய சிரியாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார்.
பந்து வீச்சில் லஹிரு குமார அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி இலங்கைக்கு எதிரான மூன்று ரி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.