பொலன்னறுவை பிக்குகளால் மட்டக்களப்பில் பௌத்த குடிமகனில்லா பகுதியில் விகாரை ; ஸ்ரீநேசன்
மட்டக்களப்பில் ஒரு பௌத்த குடிமகன் கூட வாழாத பகுதியில் பௌத்தர்களின் வழிபாட்டுத் தலம் அமைக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (11) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய நல்லிணக்கம்
நெடியகல்மலை வடமுனையில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளது. அந்த இடத்தில் உண்மையில் ஒரு பௌத்த குடிமகன் கூட வாழவில்லை.
கிட்டத்தட்ட 15 கிலோ மீற்றர் கடந்து வந்த அந்த நெடிய கல்மலையில் அவர்கள் ஒரு வழிபாட்டுத்தலத்தை அமைக்கின்றார்கள். பொலன்னறுவையிலிருந்து பிக்குகள் வருகின்றார்கள்.
வழிபாட்டு இடங்களை அமைத்து தேசிய நல்லிணக்கத்திற்கு முரண்பாடான செயலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
குருந்தூர் மலையில் பௌத்த இடிபாடுகளை கொண்டுசென்று கொட்டிவிட்டே உரிமை கோரப்படுவதாக மிகிந்தலை விகாராதிபதி கூறியிருந்ததை இங்கு குறிப்பிடுகின்றேன். எனவே இந்த விடயங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.