கச்சத்தீவை மீளப்பெற சட்டப்பேரவையில் இன்று முக்கிய தீர்மானம்
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்துவரும் நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கச்சத்தீவை மீளப் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை இல்லாதொழிப்பதற்கு இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. இந்த நிலையில், கச்சத்தீவை மீட்கக்கோரிய பல வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.