போரால் பறிபோகும் உயிர்கள்; 5 நாட்களில் 1,045 பேர் உயிரிழப்பு.. 6,000 பேர் காயம்

United States of America Death Iran-Israel War
By Sulokshi Mar 05, 2026 04:47 AM GMT
Report

   ஈரான் -இஸ்ரேல் போரால் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புதன்கிழமை அன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின.

போரால் பறிபோகும் உயிர்கள்; 5 நாட்களில் 1,045 பேர் உயிரிழப்பு.. 6,000 பேர் காயம் | Israel Iran War 1045 Killed In 5 Days 6000 Injured

 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள்

இதில், தலைநகர் தெஹ்ரான், புனித நகரமான கோம், மேற்கு ஈரான் பகுதிகள் மற்றும் மத்திய இஸ்ஃபஹான் மாகாணம் ஆகிய இடங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.

இந்தத் தாக்குதல்களில் இராணுவ நிலைகள் மட்டுமன்றி, பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகங்களும் சேதமடைந்துள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தன்னார்வப் பிரிவான பாசிஜ் (Basij) துணை இராணுவப் படை கட்டிடங்கள் மற்றும் ஈரானின் உள் பாதுகாப்பு கட்டமைப்புடன் தொடர்புடைய அலுவலகங்களையே தாங்கள் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து அல் ஜசீரா ஊடகவியலாளர் முகமது வால் தெரிவிக்கையில், "நாடு அனைத்து திசைகளிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் சுமையை அப்பாவிப் பொதுமக்களே சுமக்கின்றனர்," எனக் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய நிலவரப்படி, 6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், இதில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான் தனது எதிர்த் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. போர் தொடரும் பட்சத்தில் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள இராணுவ மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US