குறைந்துகொண்டே வரும் தங்கம் விலை; குக்ஷியில் நகைப்பிரியர்கள்!
இந்தியாவில் மோடி அரசாங்கம் மத்திய பட்ஜெட்டில் தங்கம் விலை மீதான சுங்கவரியை 6 சதவீதம் குறைத்த நிலையில் தங்கம் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அந்தவகையில் நேற்று ஜூலை 25 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி இன்று ஜூலை 26 ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.6415 க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.5255- க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.42,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ89 க்கும் ஒரு கிலோ ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.