காதலில் விழுந்த மோனலிசா ;கும்பமேளா வைரல் பெண் திடீர் திருமணம்!
"கும்பமேளா பெண்" என்று இந்தியா முழுவதும் பிரபலமான மோனாலிசா போஸ்லே, தனது காதலர் ஃபர்மான் கானை கேரளாவில் திருமணம் செய்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானதன் மூலம் இந்தியா முழுவதும் மோனாலிசா போஸ்லே பிரபலமானார்.

காதலில் விழுந்த மோனலிசா - பெற்றோர் எதிர்ப்பு
இந்த நிலையில் மோனலிசா ,கேரளா இளைஞனுடன் காதலில் விழுந்த நிலையில் காதலுக்கு மோனாலிசாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது தந்தையுடன் செல்ல மறுத்த அவர் கேரள காவல்துறையின் உதவியை நாடினார்.
திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மோனாலிசா, தான் மேஜர் என்பதால் தனது விருப்பப்படி வாழ உரிமை உண்டு என்று உறுதியாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள நயினார் கோவிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் கேரள அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதேசமயம் சுமார் ஆறு மாதங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி, கேரளா தங்களுக்கு பிடித்தமான மாநிலம் என்பதால் இங்கு திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கும்பமேளா பெண் மோனலிசாவின் திருமணம் கேரளாவின் சமூக நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர்.