1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்; அமெரிக்க வாழ் தமிழர் கைது
இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த சம்பவத்தில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த தமிழர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
விபிஎன் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் விடுத்து வந்ததாக குறித்த நபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்வதேச குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு
விசாரணையின் போது, அவர் தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பிய ஒரு சிறிய கவனக்குறைவான பதிலால் போலீசாரிடம் அவர் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சில சர்வதேச குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த செய்தி வெளிவந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக போலி மிரட்டல்களை விடுத்து வந்த இவரை கைது செய்துள்ள காவல்துறையினர், இவருக்கு பின்னால் வேறு யாரேனும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.