அநாகரீகமான படங்கள் வெளியாகிறதா? எக்ஸ் நிறுவனத்துக்கு கடும் கண்டனம்
'எக்ஸ்' நிறுவனத்திற்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வமான கடமைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக, 'எக்ஸ்' நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை பங்கு குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என எக்ஸ் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.
எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான "Grok", பெண்களை இலக்கு வைத்து ஆபாசமான, அநாகரீகமான மற்றும் பாலியல் ரீதியான வெளிப்படையான உள்ளடக்கங்களை உருவாக்கவும் பகிரவும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த அமைச்சு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
பயனர்கள் 'Grok' AI-ஐப் பயன்படுத்தி பெண்களின் கௌரவம் மற்றும் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் அவதூறான மற்றும் போலி படங்களை உருவாக்கியுள்ளனர்.
இத்தகைய செயல்கள் பாலியல் துன்புறுத்தலை இயல்பாக்குகின்றன என்றும், சட்டபூர்வமான பாதுகாப்பு அம்சங்களைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அமைச்சு எச்சரித்துள்ளது.