கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் தினமும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்
கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் தினமும் 5 தொடக்கம் 7 வரையான கொரோனா மரணங்கள் பதிவாகி வருவதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சாகரி கிரிவந்தெனிய தெரிவிக்கின்றார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் வேவைத்திட்டம் கடந்த வாரத்திலிருந்து செயற்படத் தொடங்கியுள்ளது.
ஏற்படுகின்ற அவசரமான நிலைமைகளுக்கு மத்தியில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருப்பதோடு, அவசரமான சத்திரசிகிச்சைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களில் 24 வீதமானவர்களுக்கு ஒட்சிசன் வசதி தேவைப்படுவதாகவும், 34ஆவது நோயாளர் அறைகள் உள்ளதோடு அவற்றில் 06 வார்ட் அறைகள் கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர் சாகரி கிரிவந்தெனிய கூறியுள்ளார்.