கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களத்தால், இன்று (31) வெளியிட்டப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக பதிவான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம், ஓகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எனினும், உணவு அல்லாத பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இவ்விகிதம் ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.