வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த மக்கள் அது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணை
நேற்றிரவு பயணித்த ரயிலில் மோதுண்டு இரு கால்களும் துண்டிக்கப்பட்டதால், கடும் இரத்தம் ஏற்பட்டதன் காரணமாக குறித்த நபர் மரணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயது மதிக்கத்தக்கவர் என்றும், , சடலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.