தாயைப் பார்க்க வைத்தியசாலை சென்ற மகனுக்கு நடந்த சம்பவம் ; முகம்சுழிக்க வைத்த ஊழியர்
வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்ப்பதற்காக சென்ற மகனை காவலாளி தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் தாயைப் பார்க்க அவரது மகன் நேற்று வைத்தியாசாலைக்குச் சென்றுள்ளார்.

காவலாளி
அப்போது அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த காவலாளிக்கும் குறித்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது குறித்த நபரை காவலாளி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அத்துடன் அவரைத் தாக்கவும் முயற்சித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த பெண் காவலாளி குறித்த காவலாளியைத் தடுத்து கூட்டிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பிலான காணொளி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.