நடு வீதியில் இளைஞனுக்கு அரங்கேறிய சம்பவம் ; பறிபோன உயிர்
அநுராதபுரம் சாலியபுர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (13) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியுள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற வேளையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் அநுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.