கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த மாமனார்.. மருமகள் செய்த சம்பவம் ; 309 முறை சென்ற தொலைபேசி அழைப்பு
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
ஆரம்பத்தில் இது வெளியாட்களின் கைவரிசை போல் தெரிந்தாலும், வீட்டில் எந்தப் பணமும் நகைகளும் திருடப்படாதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

திட்டமிட்ட கொலை
தீவிர விசாரணைக்குப் பிறகு, வினீத்தின் மருமகள் தான் தன் மாமனாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவியது அம்பலமாகியுள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டதாலும், பண செலவுகளில் மாமனார் கட்டுப்பாடுகளை விதித்ததாலும் ஏற்பட்ட ஆத்திரமே இந்த திட்டமிட்ட கொலைக்கு முக்கிய காரணமாகும்.
வினீத்தின் முன்னாள் ஊழியரான மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
கொலை நடக்கும்போது குடும்பத்துடன் விருந்துக்கு சென்றிருந்த ஷாலு, விஷாலுடன் கடந்த மே மாதத்திலிருந்து 309 முறை போனில் பேசியுள்ளதும், பல தகவல்களை அழித்திருப்பதும் சைபர் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்காக 6 இலட்சம் ரூபாய்க்குப் பேரம் பேசப்பட்டு, ஷாலு கைது செய்யப்பட்டுள்ளார்.