இரண்டு பெண்களுடன் கைதான 5 பேர் ; சோதனையில் காத்திருந்த ஷாக்
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண்கள் உட்பட 5 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF), பொலிஸார் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

போதைப்பொருட்கள்
இதன்போது 7 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள், 32 கிராம் ஹஷிஷ், 4 கிராம் ஹெரோயின், 20 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.108,400 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி தெஹிவளை, நெதிமல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.