10வது மாடியிலிருந்து அந்தரத்தில் தொங்கி பெண் செய்த சம்பவம் ; தகாத உறவு வந்த வினை
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், ஒரு பெண் தன் கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்து தப்பிக்க, 10-வது மாடி பால்கனியில் இருந்து அபாயகரமாக கீழே தொங்கி இறங்கிய காணொளி சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலன் தன் மனைவி வீட்டிற்கு வந்ததும் பீதியடைந்து, அப்பெண்ணை பால்கனியில் ஒளியுமாறு கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

காணொளி வைரல்
அந்த பெண் பால்கனி கம்பியை பிடித்துத் தொங்கியபடியே, கட்டிடத்தின் வெளிப்புற குழாய்கள் மற்றும் ஜன்னல் விளிம்புகளை பயன்படுத்தி சாகசமாக ஒரு அண்டை வீட்டுக்காரர் ஜன்னலை அடைந்து, அவர் மூலம் காப்பாற்றப்பட்டார்.
இந்த காணொளியைக் கண்ட இணையவாசிகள், உயிரை பணயம் வைத்த அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டிய போதும், கள்ளக்காதலனை கோழைத்தனமான செயல் என்று கடுமையாகக் கண்டித்தனர்.
ஒரு பயனர், "உங்கள் வாழ்க்கையை இத்தகைய ஆபத்தில் ஆழ்த்த எந்த ஆணும் தகுதியானவன் அல்ல!" என்று கருத்து தெரிவித்தார்.
சீனாவில் விவாகரத்து விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அங்குள்ள குடும்ப உறவுகளின் சிக்கலான நிலையை வெளிப்படுத்துகின்றன.