யாழில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ; நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு
அராலி மத்தி, வட்டுக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக ஒரு சிறிய பணி செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு அற்ற நிலையில் இருந்த நன்னீர் கிணறு ஒன்றினை புனரமைத்து, நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர்த் தாங்கி அமைத்து குடிநீர் வழங்கல் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீருக்கு தட்டுப்பாடு
அராலி கந்தஞானியார் ஆலயத்திற்கு உரித்தான காணியில் உள்ள இந்த கிணற்றினை சிலர் இணைந்து ரூபா 150000/- வரையான செலவில் இவ்வாறு தயார் செய்துள்ளனர்.
உண்மையிலேயே யாழில் பல பகுதிகளில் குடிநீருக்கு மிகவும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. வசதி படைத்தவர்கள் காசு கொடுத்து குடிநீரை வாங்குகின்றனர். பல இடங்களில் உள்ளூராட்சி சபைகள் சிறிய பணத்தொகையை பெற்றுவிட்டு குடிநீர் வழங்கல் சேவையில் ஈடுபடுகிறனர்.

என்னதான் இருந்தாலும் குடிநீர் பிரச்சினைக்கு உள்ளூராட்சி சபைகளாலும் முழுமையான தீர்வு வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
இவ்வாறான தன்னலமற்ற சேவைகளை செய்பவர்களை கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும். என்னதான் கலியுகத்தில் வாழ்கிறோம் என்று கூறினாலும் இப்படியானவர்களும் இந்த கலியுகத்தில் வாழ்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியான விடயமே.