சகோதரியுடன் தகாத உறவு; மதகுருவின் கொடூர செயல்
மசூதியில் படிக்க வந்த சிறுமியை சகோதரனுடன் சேர்ந்து மதகுரு ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தியாவின் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மதகுருவாக இருந்து வந்தார். இந்த மதகுருவிடம் சிறுமி ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குர்ஹான் படித்து வந்துள்ளார்.
சிறுமிக்கு பிசாசு பிடித்துள்ளதாக கூறி துஸ்பிரயோகம்
சம்பவத்தன்று, சிறுமியின் வீட்டிற்கு மதகுரு வந்து சிறுமிக்கு பிசாசு பிடித்துள்ளதாகவும், அதை தான் விரட்டியடிக்கிறேன் எனச் சொல்லியுள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் சகோதரரிடம், உன் தங்கைக்கு பிசாசு பிடித்துள்ளது. இதனால் அவளுடன் உடலுறவு வைத்தால் சரியாகிவிடும் எனக் கூறினார். இது தொடர்பாக சகோதரரை வற்புறுத்தி, உடலுறவுக்கு தூண்டியுள்ளார்.
அதுமட்டுமால்லாது தங்கைக்கு சகோதரர் கொடுத்த பாலியல் துன்புறுத்தலை படம் எடுத்ததுடன், அந்த படத்தை காட்டி அந்த சிறுமியை அவரும் பலாத்காரம் செய்துள்ளார். வாரத்திற்கு ஒருமுறை என இந்த கொடுமை ஆறு முதல் ஏழு மாதங்கள் நடந்துள்ளது.
சிறுமி வயிறு வலிப்பதாக அவருடைய அம்மாவிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது தான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த தாய் சம்பவம் குறித்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் மதகுரு மற்றும் சகோதரர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.