கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் கிழங்கு!
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஒருவரின் கண்பார்வை குறைபாடுகளை சரி செய்ய மற்றும் மேம்படுத்துவதற்கு உணவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம்.
கண் பார்வைக்கு உதவும் மேலதிக உணவுகள்
கீரையில் கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்க்கும்போது கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும்.
பொதுவாக வைட்டமின் ஏ குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடுகள் அதிகளவில் ஏற்படும். எனவே கண்களுக்கு ஆரோக்கியமளிக்கும் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள கேரட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகளவில் சாப்பிடலாம்.
மாதுளை மிகச்சிறந்த உணவுப்பொருளாக உள்ளது. அன்றாடம் ஒருவரின் உணவில் மாதுளை மற்றும் அதன் பூக்களை சாப்பிடும் போது கண்பார்வை மேம்படுத்த உதவியாக உள்ளது.
மாம்பழம் மற்றும் பப்பாளியில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுப்பொருள்களில் ஒன்றாக உள்ளது.