வடமேல் மாகாண வாகன ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை நேற்று (05-07-2022) முதல் மறு அறிவித்தல் வரை திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் 01.07.2022 முதல் 31.07.2022 வரை காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களை அபராதம் இன்றி புதுப்பிப்பதற்கு 31.08.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வடமேல் மாகாணத்தில் வாகனங்களுக்கு ஒன்லைன் முறையின் மூலம் வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.