புதன்கிழமைகளில் அரச விடுமுறை ; EPF பயனாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை (18) முதல் அனைத்து புதன்கிழமைகளும் அரச விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றத்தினால் ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சேவைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன்படி, EPF நன்மைகளைப் பெறுதல், 30 சதவீத முற்பணம் பெறுதல், மரணமடைந்த உறுப்பினர்களின் கோரிக்கைகளை முன்வைத்தல் மற்றும் 'AH' பதிவுகள் போன்ற சேவைகளுக்காக புதன்கிழமைகளில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள உறுப்பினர்கள், அதனை மீள மாற்றியமைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, எதிர்வரும் நான்கு வேலை நாட்களுக்குள் (வியாழன், வெள்ளி, திங்கள் அல்லது செவ்வாய்) தமக்கான நேரத்தை மீள ஒதுக்கிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய விடுமுறை மாற்றத்திற்கு அமைய, உறுப்பினர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயற்படுமாறு தொழில் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.