நெருக்கடி நிலைக்கு அரசாங்கத்தை குறைகூறவேண்டாம்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையானது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் ஏற்பட்டதல்லவென சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதுவரை இருந்த அனைத்தையும் சரியாக நிர்வகித்துள்ளது என்ற நம்பிக்கை உள்ளது.

மக்களும் உண்மையை அறிவார்கள்
சமூக ஊடகங்களில் பொய்களைக் கூறி, அந்தப் பொய்களிலேயே தங்கியிருக்கும் ஒரு குழுவைத் தவிர, மற்றைய அனைத்து சாதாரண மக்களும் உண்மையை அறிவார்கள்.
அதனால்தான் சில ஊடகங்கள் மக்களிடம் கருத்து கேட்கச் செல்லும்போது, மக்கள் அவர்களைத் திட்டி விரட்டுகிறார்கள். இவை இதற்கு முன் ஒருபோதும் நடக்காத விடயமாகும். எனவே, மக்களுக்கு ஒரு நெருக்கடி நிலை இருப்பதை நாம் அறிவோம். அது ஒரு விசேடமான சூழ்நிலை.
இது நாம் உருவாக்கிய ஒன்று அல்ல என்பது மக்களுக்குத் தெரியும். குறைந்தபட்சம் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கான வசதிகள் கூட நாட்டில் உருவாக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் இங்கு குறிப்பிட்டிருந்தார்.
எனவே, இதுவரை நாம் நாட்டைச் சரியாக நிர்வகித்ததைப் போலவே, இந்தப் பிரச்சினையையும் மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் நிர்வகிப்போம் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.