பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டமைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் செப்டெம்பர் 20 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டு செப்டெம்பர் 23 அன்று மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்குச் சாவடி நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர் 19ஆம் திகதியன்று கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்குத் தேவையான மேசைகள், கதிரைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.